பாஸ்ட் அண்ட் ப்யூரியஸ் 8
நடிகர் வின் டீசல், ராக் நடிகை சார்லீஸ் தெரோன் இயக்குனர் கேரி கிரே எப் இசை பிரையன் டைலர் ஓளிப்பதிவு ஐகியூஸ் ஹைட்கின் பாஸ்ட் அண்ட் ப்யூரியஸ் 8-வது பாகத்தில் நாயகன் வின் டீசல் மற்றும் மிச்சல் ரோட்ரிகஸ் சந்தோசமாக வாழ்க்கை நடத்தி வருகின்றனர். ஒரு நாள் வின்டீசலை பார்க்க வரும் சார்லிஸ் தெரோன் என்னும் பெண், அவருக்கு ஒரு வேலை கொடுக்கிறார். அதனை செய்ய மறுக்கும் வின் டீசலிடம், தெரோன் ஒரு வீடியோவை காட்ட, அந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சியடையும் வின் டீசல், தெரோன் சொல்லும் வேலையை செய்ய சம்மதிக்கிறார். அதேநேரத்தில் மற்றொரு நாயகனான ராக்குக்கு அவரது மேலதிகாரியிடம் இருந்து ஒரு வேலை வருகிறது. அந்த வேலையை வெற்றிகரமாக முடிக்க திட்டமிடும் ராக், வின் டீசல் மற்றும் அவரது குழுவின் உதவியை நாடுகிறார். ராக்கின் அழைப்பை ஏற்று தனது குழுவுடன் செல்லும் வின்டீசல், ராக்குக்கு தேவையான பொருள் ஒன்றை கைப்பற்ற உதவி செய்கிறார். இவ்வாறு அனைத்தும் சரியாக சென்று கொண்டிருக்கையில், ராக்கை தாக்கிவிட்டு, அந்த பொருளை எடுத்துச் செல்...